நாகப்பட்டினம் நம்பியார் நகர் பகுதியில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம் மூலம் ரூ. 15 லட்சம் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள டீசல் விற்பனை நிலையத்திற்கு கலெக்டர் ஆகாஷ் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். இந்த விற்பனை நிலையம் மூலம் விசைப்படகுகளுக்கு 19 ஆயிரம் லிட்டர் மற்றும் நாட்டுப்படகுகளுக்கு 4,400 லிட்டர் மானிய விலையில் டீசல் வழங்கப்படும். இதன் மூலம் நம்பியார் நகர் மீனவர்கள் சிரமமின்றி மீன்பிடி தொழிலை மேற்கொள்ள முடியும்.