சாலை விபத்தில் அரசு அலுவலர் பலி

1பார்த்தது
மயிலாடுதுறை மாவட்ட ஊராட்சி மற்றும் தணிக்கை அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், செம்பனார்கோவில் அருகே சாவடி பகுதியில் தனது மகன் நாராயணனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.