கருணாநிதி பிறந்த நாள் விழா

116பார்த்தது
திருக்குவளையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த இல்லத்தில் அவரது 103வது பிறந்த நாளை முன்னிட்டு, நாகை மாவட்ட திமுக செயலாளர் கெளதமன் தலைமையில் திமுகவினர் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். மேலும், முத்துவேலர், அஞ்சுகம் அம்மையார் மற்றும் முரசொலி மாறன் திருவுருவச் சிலைகளுக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ப. கோவிந்தராஜன், இல. மேகநாதன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி