நாகை நகர காவல் சரகத்திற்கு உட்பட்ட அந்தணபேட்டை டாஸ்மார்க் கடையில் மேற்பார்வையாளராக இருப்பவர் சண்முகசுந்தரம். நேற்று, அஞ்சலப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் என்பவர் மது பாட்டிலை கடனாகக் கேட்டுள்ளார். தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ரஞ்சன், இரு சக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து கடை வாசலில் கொளுத்தி, சண்முகசுந்தரத்தை கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் ரஞ்சன் கைது செய்யப்பட்டார்.