கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

0பார்த்தது
கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
வேளாங்கண்ணி அடுத்த செருதூர் பகுதியைச் சேர்ந்த வேலுமயில் என்பவர் கடந்த 19ஆம் தேதி மாலை 3 மணி அளவில் பெரிய கடை தெருவில் மளிகை சாமான் வாங்கச் சென்றார். அப்போது, நாகையைச் சேர்ந்த துரைப்பாண்டி என்பவர் மளிகை கடை வாசலில் தட்டு ரிக்ஷாவை நிறுத்தியுள்ளார். இது தொடர்பாக வேலுமயில் கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் துரைப்பாண்டி, வேலுமயிலை தாக்கி கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து வேலுமயில் நாகை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் துரைப்பாண்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி