நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த இல்லத்தில், முரசொலி மாறனின் 22 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நாகை மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மீன் வளர்ச்சிக் கழக தலைவருமான கௌதமன் தலைமையில் திமுகவினர் முரசொலி மாறனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், கலைஞர், அஞ்சுகம் அம்மையார், முத்துவேலர் சிலைகளுக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.