மயிலாடுதுறை: வேன் கவிழ்ந்து ஒருவர் பலி

293பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தைச் சேர்ந்த 25 பேர் வேனில் காரைக்கால் அம்பகரத்தூரில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது, ஆத்துக்குடி கிராமத்தில் வேனின் பின்பக்க டயர் வெடித்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் படிக்கட்டில் பயணம் செய்த 65 வயது முருகன் என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 14 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி