வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கு பாராட்டு

2பார்த்தது
வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கு பாராட்டு
நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தப் பணியை 100 சதவீதம் நிறைவு செய்த வாக்குச்சாவடி தேர்தல் மேற்பார்வையாளர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், பணியை முழுமையாக முடித்த மேற்பார்வையாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி, சான்றிதழ், கேடயம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார். இந்த சிறப்பு திருத்தப் பணி மூலம் வாக்காளர் பட்டியல் மேம்படுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :