நாகை மாவட்டம் திருக்குவளை அருகே பண்டாரவாடை 36 ஆம் குடியிருப்பில் 50 குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். குறிப்பாக பொதுக்குளம் இல்லாததால் பொதுமக்கள் குளிப்பதற்கும், பிற அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் சிரமப்படுகின்றனர். இது குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷை நேரில் சந்தித்து, தங்கள் பகுதிக்கு குளம் வெட்டி, சுற்றுச்சுவர் மற்றும் படிக்கட்டுகள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தனர்.