நாகப்பட்டினம் மாவட்டத்தில் 36வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்ற இந்த பேரணியில் காவலர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்து பங்கேற்றனர். சாலை விதிகளை முறையாகப் பின்பற்றுவதன் அவசியம், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது, ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது, மது அருந்தி வாகனம் ஓட்டாமல் இருப்பது, நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிவது போன்றவற்றை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெற்றது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கதிர்வேலு மற்றும் அரசு அலுவலர்களும் இதில் கலந்துகொண்டனர்.