கும்பகோணம் அருகே திருச்சேறையைச் சேர்ந்த ஜெகன் மற்றும் செம்மங்குடியைச் சேர்ந்த ஜனனி ஆகியோர் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் நாகப்பட்டினத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை அறிந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் கோபம் கொண்டு இருவரையும் தேடியுள்ளனர். உயிருக்கு பயந்த காதல் ஜோடி நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து, பாதுகாப்பு வேண்டும் என்று மனு அளித்தனர். காவல் நிலைய வாசலிலேயே இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.