சீர்காழி வட்டம், வெள்ளைகுளம் பகுதியில் சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயா, சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி மற்றும் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, காரில் 480 புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள் கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, காரை ஓட்டி வந்த வெள்ளக்குளத்தைச் சேர்ந்த சண்முகம் (41) கைது செய்யப்பட்டு, மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.