தருமபுர ஆதிரத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை

0பார்த்தது
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 27-வது மடாதிபதியான ஸ்ரீல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் 60-வது ஆண்டு மணி விழாவை முன்னிட்டு பத்து நாட்கள் விழா நடைபெற்று வருகிறது. அதன் ஏழாவது நாளாக, ஆதீன மடத்தில் யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், பசு, காளை, கழுதை, ஆடு, நாய், சேவல் என ஒன்பது வகையான 60 மிருகங்களுக்கு கோபூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, வடுக பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மிருகங்களுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு, புது வஸ்திரங்கள் சாத்தப்பட்டு மகாதீப ஆராதனை செய்யப்பட்டது. தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு பக்தர்களும் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி