தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆய்வு கூட்டம்

0பார்த்தது
தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆய்வு கூட்டம்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல்-2026 ஐ முன்னிட்டு தேர்தல் நடத்தை விதி தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்தல் விதிமுறைகளை மீறி பணம், மது மற்றும் இதர பொருட்களை எடுத்துச் செல்பவர்களை கண்காணிக்கவும், உரிய ஆவணமின்றி ரூ. 10 லட்சத்திற்கும் மேல் பணப்புழக்கத்தில் ஈடுபடுவோரை கண்டறியவும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வங்கி, காவல்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து செயல்பட்டு கைப்பற்றுகை செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி