மயில் உருவில் பல்லக்கில் எழுந்தருளிய அம்மன்

754பார்த்தது
மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் ஆலயத்தில் நடைபெறும் துலா உற்சவம் ஐந்தாம் நாளான இன்று ஸ்ரீ அபயாம்பிகை உடன் மயூரநாதர் பூதம் பூதகி வாகனங்களில் எழுந்தருள பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. மயில் உருவில் பல்லக்கில் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் மயில் ஆடுவது போல் அசைத்து காவிரி கரைக்கு அழைத்துச் சென்று தீர்த்தவாரி நடத்தினர். ஆலய யானை அபயாம்பிகை சுவாமி அம்பாளை வழிபட்டு நின்ற காட்சி பக்தர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது. இந்த உற்சவம் கடந்த ஏழாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்புடைய செய்தி