கோடியக்கரையில் கடல் உள்வாங்கியது

80பார்த்தது
வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளபள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் இன்று 3வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. கோடிக்கரையில் சுமார் 50 அடி தூரம் கடல் உள்வாங்கியுள்ளது. மீன்பிடிக்க செல்லாததால், சில மீனவர்கள் வலைகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடல் சீற்றத்தால் 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் கரையோரம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தொடர்புடைய செய்தி