மயிலாடுதுறை மாவட்டத்தில், காவிரி ஆற்றை மையப்படுத்தி நடைபெறும் துலா உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர், வதான்யேஸ்வரர், ஐயாரப்பர், புனுகீஸ்வரர், காசி விஸ்வநாதர், தெப்பக்குளம் விஸ்வநாதர், படித்துறை விஸ்வநாதர் ஆலயங்களில் கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காவிரி தீர்த்தவாரி இன்று நடைபெற்றது. இதில் அனைத்து ஆலயங்களில் இருந்தும் சுவாமி அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகள் பக்தர்களுக்கு காட்சியளித்து தீர்த்தவாரி அளித்தனர். அஸ்திர தேவர்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. தருமபுரம் மற்றும் திருவாவடுதுறை ஆதீன குரு மகா சன்னிதானங்கள் உள்ளிட்ட பக்தர்கள் புனித நீராடினர்.