நாகை நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனை மேடு பகுதியைச் சேர்ந்த வினித், மீன்பிடி தொழில் செய்து வருகிறார். கடந்த 5 ஆம் தேதி, பனை மேடு பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த விக்னேஷ் மற்றும் 2 சிறுவர்களை அவர் கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கீரை கொல்லை தெருவில் வந்து கொண்டிருந்த வினித்தை 3 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.