வேதாரண்யம்: தக்காளி விலை சரிவு; ஒரு கிலோ ரூ.10க்கு விற்பனை

480பார்த்தது
வேதாரண்யம்: தக்காளி விலை சரிவு; ஒரு கிலோ ரூ.10க்கு விற்பனை
வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தக்காளி விலை திடீரென வீழ்ச்சியடைந்து ஒரு கிலோ ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரூ.40 முதல் ரூ.60 வரை விற்ற தக்காளி, தற்போது குறைந்த விலைக்குக் கிடைப்பதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியுடன் கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர். முன்பு ரூ.100 வரை விற்ற தக்காளி, படிப்படியாகக் குறைந்து தற்போது இந்த விலைக்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி