சீர்காழி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

436பார்த்தது
சீர்காழி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதாளம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, விஜயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி