நவம்பர் 16ம் தேதி முதல் திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழை தீவிரமடையும் என கணிக்கப்பட்டுள்ளது. தென் சீனக்கடல் பகுதியில் இருந்து கிழக்கு காற்றும், வட இந்தியாவில் இருந்து வடக்கு காற்றும் வந்து வடகிழக்கு காற்றாக 11-ந் தேதி அதாவது நாளை முழுமையாக உள்ளே வருகிறது. இதன் காரணமாக இன்று (திங்கட்கிழமை) இரவில் இருந்தே பருவமழை பெய்யத் தொடங்க இருக்கிறது. நாளை, நாளை மறுநாள் கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.