
செம்போடை முத்து மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்போடை ஊராட்சியில் உள்ள முத்து மாரியம்மன் ஆலயத்தில், கடந்த 28ம் தேதி யாக சாலை அமைக்கப்பட்டு பூஜைகள் தொடங்கின. இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தன. வேத விற்பன்னர்களின் வேத மந்திரங்கள் மற்றும் இன்னிசை முழக்கங்களோடு கும்ப கலசத்தை அடைந்து, முத்துமாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


























