நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் கோயிலில், சேலத்தைச் சேர்ந்த 157 சிவனடியார்கள் உழவாரப் பணி மேற்கொண்டனர். கோவில் கொடிமரம், மகர தோரணவாயில், அம்மன் சன்னதி, ஆலய வளாகம் உள்ளிட்ட இடங்களை தூய்மைப்படுத்தினர். உலக நன்மை வேண்டி விளக்கேற்றி, கோளறு பதிகம் பாடி சுவாமியை வழிபட்டனர்.