24 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திய 2பேர் கைது

1பார்த்தது
24 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திய 2பேர் கைது
வேதாரணியம் அடுத்த வாய்மேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தானி கோட்டகம் கடைத்தெரு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோகன்லால் மற்றும் ரமேஷ் குமார் சவுத்ரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 24 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி