வேதாரண்யத்தில் 944 வீட்டுமனை பட்டா

2பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட தோப்புத்துறையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், 869 பயனாளிகளுக்கு 53.67 கோடி ரூபாய் மதிப்பிலும், அகஸ்தியம்பள்ளி பகுதியைச் சேர்ந்த 35 பயனாளிகளுக்கு 2.49 லட்சம் ரூபாய் மதிப்பிலும், தலைஞாயிறு 1ஆம் சேத்தி பகுதியைச் சேர்ந்த 40 பயனாளிகளுக்கு 2.89 லட்சம் ரூபாய் மதிப்பிலும் என மொத்தம் 944 பயனாளிகளுக்கு 53.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீட்டுமனைப் பட்டாவினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் மற்றும் அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி