நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மிதவை கரை ஒதுங்கியது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். கோவில்பத்து கிராமத்தின் கடற்கரையோரம் உலோகத்தாலான மிதவை ஒன்று கரை ஒதுங்கியது. இதனை பார்க்க அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் திரண்டனர். கரை ஒதுங்கிய மிதவை, துறைமுகங்களில் கப்பலுக்கு ஆழமான பகுதியை உறுதிப்படுத்துவதற்காக நிறுத்தப்படுவது என்பது தெரியவந்தது. இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பயன்பாடு குறைந்து இந்த மிதவை, கரை ஒதுங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.