நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஆரிய நாட்டு தெருவில் 2 இலட்சம் கொள்ளவு குடிநீர் தொட்டி அமைக்க பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவரும் கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆன தாமஸ் ஆல்வா எடிசன் பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டை பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் மரிய சார்லஸ், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் நிக்சன், வெற்றிவேல், சுமதி, சத்யா, சசிரேகா, மற்றும் ஆரிய நாட்டு தெரு பஞ்சாயத்தார்கள், கழக நிர்வாகிகள் k. சார்லஸ், கந்தையன், லீயோ ஜெரோலின், ஸ்டாலின் பிரசாந்த், பாண்டியன், அருளாணந்தம், ச்சிகுமார், ஜாக்கி, விலேக், கயல் மற்றும் பேரூராட்சி அலுவலகர்கள் சந்துரு, மணி ஆகியோர் பங்கேற்றனர்