நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் நகராட்சி நீலா தெற்கு வீதியில் மாவட்ட கல்வித் துறை முனைப்புத் திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் 'பொன்னி சித்திரக் கூடத்தில்' கூடுதல் ஓவியக் கூடம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட கூக்ஸ் ரோடு பகுதியில் உள்ள நாய்கள் அறுவை சிகிச்சைக் கூடத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.