நாகை: சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

61பார்த்தது
நாகை: சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவரும் கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கீழையூர் வட்டார ஆத்மா குழு தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் வேதாரன்யம் நகர மன்ற தலைவர் மா. மீ. புகழேந்தி, வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா, பேரூர் செயலாளர் மரிய சார்லஸ், கவுன்சிலர்கள் வெற்றி வேல், சத்யா, தையல்நாயகி, திமுக நிர்வாகிகள் கந்தையன், ஸ்டாலின், மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் இந்து கிறிஸ்தவர் இஸ்லாமியர் என சாதி மதங்கள் கடந்து ஒரே இடத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தமிழ் பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசி வளையல் அணிவித்து மாலையிட்டு மலர்கள் தூவி சமுதாய வளைகாப்பு நடைபெற்றது மேலும் புலி சோறு தயிர் சோறு தேங்காய் சோறு எலுமிச்சை சோறு சர்க்கரை பொங்கல் என ஐந்து வகை உணவுப் பொருட்களை வாழை இலையில் வைத்து பந்து பரிமாறப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்கள் இந்த காலகட்டத்தில் உட்கொள்ள வேண்டிய உணவு முறைகள் மற்றும் இயற்கை உணவுகள் குறித்து விழிப்புணர்வுகளை வழங்கி விழாவில் கலந்து கொண்டவர்கள் பேசினார்.