நாகையில் கோவில் குருக்கள் மீது எழுந்த சர்ச்சை

2பார்த்தது
நாகை மாவட்டம் சிக்கல் பகுதியில் உள்ள சிங்காரவேலர் ஆலயத்தின் சிவா குருக்கள், பெங்களூரில் இருந்து வந்த பக்தர்களிடம் அம்மன் தாமரை மலர் போன்றவள் என்றும், உங்கள் உள்ளத்திலும் தாமரை மலர வேண்டும் என்றும் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளார். தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் குருக்கள் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, இடதுசாரி அமைப்புகளால் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி