வேதாரண்யம் கடலோரப் பகுதியில் மே 18-ஆம் தேதி முதல் வழக்கத்தைவிட வேகமாக வீசும் கடற்காற்றால் கடல் நீர்மட்டம் உயர்ந்து, வாய்மேடு-தென்னடார் கிராமங்கள் இடையே முள்ளியாற்றின் கழிமுகப் பகுதியான பட்டாணிக் கண்டி உடைப்பின் வழியே நன்னீர் நிரம்பியுள்ள புது ஆற்றில் புகுந்துள்ளது. இதனால், ஆற்று நீரில் வாழும் விரால், கூரை, கெண்டை போன்ற மீன் இனங்கள் மயங்கிய நிலையில் காணப்படுகின்றன. பொதுமக்கள் கம்பாலும் வலைகளாலும் இவற்றை பிடித்துச் செல்கின்றனர்.