நாகை சட்டமன்றத் தொகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

1பார்த்தது
நாகை சட்டமன்றத் தொகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 01-01-2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம், கீழ்வேளுர், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பு உதவி முகாம்கள் இன்று மற்றும் நாளை (நவ. 15, 16) அவரவர் வாக்குச்சாவடிகளில் நடைபெறுகின்றன. மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் நாகூர் கௌரியார் நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி