வேதாரண்யம் அருகே கோடிக்கரையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் பாலமுருகனின் ஃபைபர் படகு கடல் சீற்றத்தால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு மீனவர் உயிரிழந்தார். வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 மீனவர்களையும், உயிரிழந்த மீனவரின் குடும்பத்தையும் நாகை மாவட்ட தமிழக வெற்றிக்கழக செயலாளர் சுகுமாரன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். உயிரிழந்த குடும்பத்திற்கு மீனவர் நலத்துறை சார்பில் 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகைக்கான காசோலையை மீன்வளத்துறை இணை இயக்குனர் ஷர்மிளா, உதவி இயக்குனர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.