நாகை: விவசாயிகள் குறைதீர் கூட்டம்; நெருக்கடி கொடுக்கும் போலீஸ்

59பார்த்தது
நாகை: விவசாயிகள் குறைதீர் கூட்டம்; நெருக்கடி கொடுக்கும் போலீஸ்
பதநீா் இறக்கும் பனைத் தொழிலாளா்களுக்கு போலீஸாா் நெருக்கடி கொடுப்பதை தவிா்க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: பிரான்சிஸ்: நாகை மாவட்டத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பனைத் தொழிலாளா்கள் அரசு அனுமதியுடன், பனை பதநீா் இறக்கினாலும், அதை கள்ளச்சாராயம் எனக் கூறி போலீஸாா் கள்ளச்சாராய வழக்குகளைப் பதிவு செய்கின்றனா். இதனால் பனைத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, பனைத் தொழிலாளா்களுக்கு போலீஸாா் நெருக்கடி அளிப்பதை தவிா்க்க வேண்டும் என்றனர். 

கூட்டத்தில், பாப்பாக்கோயில், சங்கமங்கலம் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நெற்பயிா்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். 

மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, முதுநிலை மண்டல மேலாளா் சிவப்பிரியா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ். கண்ணன், கூட்டுறவுத் துறை இணை பதிவாளா் அ. தயாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி