மருமகள் தற்கொலை மாமனார் கைது

0பார்த்தது
மருமகள் தற்கொலை மாமனார் கைது
வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் பகுதியைச் சேர்ந்த காவியா (23) என்பவர், தனது 7 மாத பெண் குழந்தையுடன் புதன்கிழமை இரவு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மரணத்திற்கான காரணம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த நிலையில், அவரது மாமனார் பழனித்துரையை வாய்மேடு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இதற்கிடையில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்டாரா என்பது குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, காவியாவின் மாமியார் செந்தமிழ்ச்செல்வி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.