கடலில் வீசும் சூறாவளி காற்று காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் உள்ள கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், வாணவன்மகாதேவி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் கடந்த 5 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.