மயிலாடுதுறை ரயிலடி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மனைவி லதா (53), கோரைப்பாய், பிளாஸ்டிக் சேர் விற்பனை செய்யும் இவர், தேமுதிக மாநில பொதுக்குழு உறுப்பினரான ஜான் ராஜ்குமாரிடம் (59) பிளாஸ்டிக் சேர்களை விற்பனை செய்துள்ளார். உடைந்த சேர்களை மாற்றித் தருமாறு ஜான் ராஜ்குமார் தெரிவித்த நிலையில், புதிய சேர்களுடன் சென்ற லதாவை வீட்டுக்குள் அழைத்த அவர், அத்துமீறி நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த லதா, வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக ஜான் ராஜ்குமார் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். லதாவின் புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜான் ராஜ்குமாரைக் கைது செய்தனர்.