கோடிய கரையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மாயமான படகில் இருந்த மூன்று மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் கவிழ்ந்த படகை பிடித்துக்கொண்டு கடலில் தத்தளித்த நிலையில், கோடியக்கரையிலிருந்து சென்ற பைபர் படகில் மீட்கப்பட்டு வேதாரணியம் நகராட்சிக்குட்பட்ட மணியன் தீவு கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டனர். மாயமான மற்றொரு மீனவரான சின்னப்பா என்கிற அன்பு செல்வத்தை தேடும் பணி தொடர்ந்த நிலையில், அவர் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளார்.