நாகை மாவட்டம் மேலக்கோட்டை வாசல் பகுதியில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.10.86 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து பயணிகளுக்கான நிழலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ், சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் கௌதமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.