நாகை மாவட்டத்தில் திமுகவில் இருந்து நிர்வாகிகள் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். கடந்த வாரம் தலைஞாயிறு திமுக நிர்வாகி செல்வி சேவியர் அதிமுகவில் இணைந்த நிலையில், இன்று (நவ.03) அதே பகுதியில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.வினோத் அதிமுகவில் இணைந்துள்ளார். இது 2026 தேர்தலுக்கான அதிமுகவின் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. தற்போது நாகை, மயிலாடுதுறை தொகுதிகளில் ஒன்றே அதிமுக வசத்தில் உள்ளது.