பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்ட நாகை எஸ். பி

5பார்த்தது
பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்ட நாகை எஸ். பி
நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் Dr. K. S. பாலகிருஷ்ணன் அவர்கள் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து 15 மனுக்களைப் பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். மேலும், மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்ட காவல் நிலைய பொறுப்பு அலுவலர்களுக்கு மனுக்களை விரைந்து முடிக்குமாறு அறிவுரை வழங்கினார். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் மனு நாள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி