நாகை அருகே சிக்கல் ரயில்வே கேட் கீப்பரை தாக்கியதாக இளைஞர் வல்லரசுவை போலீஸார் கைது செய்தனர். சரக்கு ரயில் சென்ற பிறகு கேட்டை திறப்பதாகக் கூறிய கீப்பர் ஆசிர்வாதத்தை, இருசக்கர வாகனத்தில் வந்த வல்லரசு தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிர்வாதம் அளித்த புகாரின்பேரில் நாகை ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்தனர்.