நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி 16வது வார்டில் உள்ள பக்தர்குளம் மாரியம்மன் கோயில் குளக்கரையில், ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நடைபயிற்சி நடைபாதையும் சுற்றுச்சுவரும் இன்று தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் முன்னிலையில் நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.