நெல்லில் உள்ள பதர் போன்றவர் ஓபிஎஸ்

0பார்த்தது
நாகை மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக 2021 தேர்தல் அறிக்கையில் 100 நாட்கள் சட்டமன்றம் நடக்கும் என அறிவித்திருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில் 165 நாட்கள் மட்டுமே சட்டமன்றம் நடந்துள்ளது. இது திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கு சான்றாகும். ஓ.பன்னீர்செல்வம் குறித்த கேள்விக்கு, நெல்லில் பதர் வருவது இயற்கை, அதை யாரும் வீட்டில் வைப்பதில்லை, அதுபோலத்தான் ஓ.பன்னீர்செல்வம் என கருத்து தெரிவித்தார். அமலாக்கத்துறை அமைச்சர் கே.என். நேரு மீதான குற்றச்சாட்டு குறித்து முழுமையான தகவல் வரவில்லை என்பதால் விவாதிக்க தேவையில்லை என்றார். தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்தது குறித்து, கூட்டணியில் அணி மாறுவது இயற்கையே என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி