வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த கனிவண்ணன் அளித்த புகாரின் பேரில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 13 பேரிடம் மொத்தம் ரூ. 49 லட்சம் மோசடி செய்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருமலை (32) என்பவரை நாகப்பட்டினம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பிப். 5ம் தேதி கைது செய்தனர். சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி, விசா, விமான டிக்கெட், மருத்துவ பரிசோதனை, முகவர் கட்டணம் என கூறி தலா ரூ. 4 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை பெற்றுக்கொண்டு, வெளிநாட்டுக்கு அனுப்பாமல் ஏமாற்றியுள்ளார்.