நாகை வெளிப்பாளையத்தில் உள்ள அவுரித்திடலில் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நாகை எம்பி வை. செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்எல்ஏ வி. பி. நாகை மாலி, சிபிஐ மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.