நாகை அவுரி திடலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக மற்றும் அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எஸ் டி பி ஐ உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.