நாகை மாவட்டம் வேதாரண்யம் மாவட்ட தலைமை மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, ஓ. எஸ். மணியன் தலைமையில் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், உபகரணங்கள், குடிநீர் வசதி, அமரர் ஊர்தி, மின் விளக்குகள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் கழிவறை வசதிகள் இல்லாததை கண்டித்தும், இரவு நேரங்களில் அவசர மருத்துவ உதவிக்கு மருத்துவர்கள் பணியில் இல்லாததை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கனமழை பெய்தபோதும் 300க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குடைகளை பிடித்தவாறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.