வருவாய் கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

167பார்த்தது
தமிழகம் முழுவதும் உள்ள வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில், கீழ்வேளூர், திருப்புகழ், வேதாரண்யம் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பும் சுமார் 25க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.