புரட்சித்தமிழர் மக்கள் கழக நிறுவனத் தலைவர் கைது.

0பார்த்தது
புரட்சித்தமிழர் மக்கள் கழக நிறுவனத் தலைவர் கைது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தில், புரட்சித்தமிழர் மக்கள் கழக நிறுவனத் தலைவர் ஆனந்தராஜ், திமுக தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரிபாலன் மற்றும் திமுக கிளைச் செயலாளர் வீரமணி ஆகியோர் அளித்த புகார்களின் அடிப்படையில், கீழையூர் போலீசார் ஆனந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் முன்னாள் முதல்வர் கலைஞர், முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் குறித்தும் தவறாக சித்தரித்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.